ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் ஆறு பொலிஸார் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில்,

’ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் தாலிபன் தீவிரவாதிகள் இன்று  தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர்.

இதில் ஆறு பொலிஸார் கொல்லப்பட்டனர். 4  பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்."  என்றார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் ராணுவ முகாம் மீது தாலிபன்கள் நடத்திய  தற்கொலைப் படைத் தாக்குதலில் 43 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.