யாழ். ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதியின் உடல் தகனத்தில் இழுபறி.!!!

Published By: Digital Desk 7

22 Dec, 2017 | 01:34 PM
image

யாழ்ப்பாணம் - ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ்.முற்றவெளிப் பகுதியில் தகனம்  செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி பொதுமகன் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எதிராளிகள் ஐவரையும் பிற்பகல் 2 மணிக்கு மன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம்  கட்டளை பிறப்பித்துள்ளது.

குறித்த நாக விகாரையின் விகாரதிபதி மேகாஜதுரே ஜானரத்ன தேரர் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அவரது உடலினை இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் தகனம் செய்வதற்கு யாழ்.இராணுவ படைத் தலமையகம் ஆரியகுள நாக விகாரையினருடன் இணைந்து ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியில் யாழ்.கோட்டை தமிழர் ஆராச்சி மாநாட்டின் நினைவுத் துபி மற்றும் முனீஸ்வரர் ஆலயம் என்பன உள்ள நிலையில் எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி பொதுமகன் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கானது இன்று நண்பகல் 12.30 மணியளவில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது அவ் வழக்கின் இடைநகர்த்தல் பத்திரத்தின் மீதான விசாரனையின் போது குறித்த வழக்கின் எதிராளிகளான யாழ்.மாநகர சபை ஆணையாளர், யாழ் பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர், யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதகர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, ஆரியகுள நாக விகாரையின் விகாராதிபதி ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு  யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு,,,,

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்றவெளிப்பகுதியில் பெரும் ஏற்பாடு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55