தென்கொரியாவின் ஜேச்சியான் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் அமைந்துள்ள உடற்பயிற்சி மையத்தில்  நேற்று மாலையில் திடீரென தீ விபத்தில் 29 பேர் பலியாகியுள்ளனர்.

கட்டிடம் முழுவதும் பரவிய தீயில் சிக்கியும், புகையில் மூச்சுத்திணறியும் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 26 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்கொரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய தீ விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.