வத்தளை பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இன்று  அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வர்ணப் பூச்சி தயாரிக்க பயன்படும் இரசாயன களஞ்சியசாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. 

கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

இதேவேளை ஏற்பட்ட சேதங்கள் இதுவரை முழுமையாகக் கணக்கிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.