ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கை உட்பட 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன. 

ஜெருசலேம் நகரத்துக்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும் உரிமை கொண்டாடிவரும் நிலையில் இது ஒரு தீர்க்கப்படாத சர்ச்சையாகத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக ஏற்பதாக அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.