செவ்­வாய்க்­கி­ர­கத்தின்  மேற்­ப­ரப்பில் கடல் பஞ்சால் உறிஞ்­சப்­பட்­டது போன்று நீர் உறிஞ்­சப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­வ­தாக புதிய ஆய்­வொன்று உரிமை கோரு­கி­றது.

 அந்தக் கிர­கத்­தி­லுள்ள பாறை­களில் எரி­மலைச் செயற்­பா­டுகள் கார­ண­மாக    வெளித்­தள்­ளப்­பட்ட கனி­யுப்­புகள் படிந்­தி­ருப்­பது  கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கவும்  அந்தக் கனி­யுப்­புகள் பூமி­யி­லுள்ள  நீரை விடவும் 25  சத­வீ­தத்­திலும் அதி­க­மான நீரை உறிஞ்சி வைத்­தி­ருக்கக் கூடி­யவை எனவும் பிரித்­தா­னிய ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பூமி விஞ்­ஞான பிரிவைச் சேர்ந்த  ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.

ஆனால் அந்த நீர் செவ்­வாயின் மேற்­ப­ரப்பில் எவ்­வி­டங்­களில் உறிஞ்­சப்­பட்­டுள்­ளது என்பது தொடர்ந்து மர்மமாகவுள்ளதாக அவர்கள் தெரிவிக் கின்றனர்.