இலங்கை - இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரின் இரண்­டா­வது போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது. முதல் போட்­டியில் அடைந்த தோல்­விக்கு பதி­லடி கொடுத்து தொடரை இழக்­காமல் இருக்க இன்­றைய போட்­டியில் இலங்கை அணி நிச்­சயம் வென்­றாக வேண்­டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்­தி­யாவின் கட்டக் நகரில் நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்ற இலங்­கைக்கு எதி­ரான முத­லா­வது இரு­ப­துக்கு 20 போட்­டியில் 93 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் இந்­திய அணி அபார வெற்றி பெற்­றது.

இலங்­கைக்கு எதி­ராக 93 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் பெற்ற வெற்­றி­யா­னது இரு­ப­துக்கு 20  கிரிக்கெட் வர­லாற்றில் இந்­தியா பெற்ற மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும்.

இதே­போல இலங்கை அணி சந்­தித்த மோச­மான தோல்­வியும் இதுதான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக பல்­லே­கலைமைதா­னத்தில் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்­றதே மோச­மான நிலை­யாக இருந்­தது.

இந்­தி­யா­வுக்கு சுற்­றுப்ப பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்­டிகள் கொண்ட தொடர்­களை இந்­தி­யா­விடம் இழந்த நிலையில் மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரின் முதல் போட்டி கட்டாக் நகரில் நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்­றது. 

இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றிபெற்ற இலங்கை களத்­த­டுப்பை தேர்­வு­செய்­தது. 

அதன்­படி, ரோஹித் ஷர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக கள­மி­றங்­கினர். 5ஆ-வது ஓவரில் மெத்­தியூஸ் பந்தில் ரோஹித் ஷர்மா 17 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். இத­னை­ய­டுத்து கள­மி­றங்­கிய ஷ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஜோடி நிதா­ன­மாக விளை­யா­டி­யது.

இந்­நி­லையில் 24 ஓட்­டங்­க­ளுடன் ஷ்ரேயாஸ் பெவி­லியன் திரும்ப அடுத்­த­தாக டோனி கள­மி­றங்­கினார். இரு­வரும் அதி­ர­டி­யாக விளை­யாட அணியின் ஓட்ட வேகம் உயர்ந்­தது. 

15ஆ-வது ஓவரில் 61 ஓட்­டங்கள் எடுத்த ராகுல், திஸ­ரவின் பந்தில் ஆட்­ட­மி­ழந்தார். 

இறுதிக் கட்­டத்தில் துடுப்­பெ­டுத்­தாட வந்த மணிஷ் பாண்டே 2 சிக்­ஸர்கள் அடிக்க, இந்­திய அணி 20 ஓவர்­களில் 180 ஓட்­டங்­களை எட்­டி­யது. டோனி 39 ஓட்­டங்­க­ளையும், பாண்டே 32 ஓட்­டங்­க­ளையும் பெற்று களத்தில் இருந்­தனர். 

இத­னை­ய­டுத்து, 181 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் இலங்கை அணி கள­மி­றங்­கி­யது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக நிரோஷன் திக்­வெல்ல, உபுல் தரங்க ஆகி யோர் கள­மி­றங்­கினர். திக்­வெல்ல 13 ஓட்டங்களுடன் ஆட்­ட­மி­ழந் தார். அடுத்­த­தாக குசல் ஜனித் பெரேரா கள­மி­றங்­கினார். மறு­மு­னையில் நின்ற தரங்க 23 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்த நிலையில் சஹால் பந்தில் ஆட்­ட­மி­ழக்க, குசல் ஜனித்தும் 19 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார். 

அவர்­களை தொடர்ந்து வந்­த­வர்கள் இந்­திய அணி­யி­னரின் பந்­து­வீச்­சுக்கு தாக்­குப்­பி­டிக்க முடியாமல் ஒற்றை இலக்க ஓட்­டங்­க­ளுடன் அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழந்­தனர். இதனால் இலங்கை அணி 16 ஓவர்கள் முடிவில் 87 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்திய அணி பந்து வீச்சில் சஹால் 4 விக்கெட்டுக்களை யும், பாண்டியா 3 விக்கெட் டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், உனத் கட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.