2018-ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள 11 ஆவது ஐ.பி.எல். போட்­டிக்­கான வீரர் கள் ஏலம் தொடர்­பான திகதி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

அதன்­படி, ஒவ்­வொரு அணியும் அதி­க­பட்­ச­மாக ஐந்து வீரர்கள் வரை தக்­க­வைத்­துக்­கொள்ள முடியும். இவ்­வாறு தக்­க­வைக்­கப்­பட்ட வீரர்­களின் விவ­ரத்தை அனைத்து அணி­களும் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 4-ஆம் திக­திக்குள் தெரி­விக்க வேண்டும்.

ஒவ்­வொரு அணிக்கும் வீரர்­களை ஏலம் எடுக்க இந்த முறை இந்­திய ரூபா மதிப்பில் ரூ.80 கோடி வரை செலவு செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதில் குறைந்­த­பட்சம் 75 சத­வீ­த­மா­வது கட்­டாயம் செலவு செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். ஏலத்­துக்கு அதி­க­பட்ச தொகை இந்­திய ரூபா மதிப்பில் ரூ.66 கோடி என்பது குறிப்பிடத் தக்கது.