போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவரும் பாதாள உலகக்குழுவின் தலைவருமான மகந்துர மதுஷவுடன் நேரடி தொடர்பைபேணியவர் உட்பட 8 பேர் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதாள உலகக் குழுவின் தலைவரான மகந்துர மதுஷ என்பர் தற்போது வெளிநாடொன்றில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், ஜயவர்தனபுர விசேட செயலணி மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நீர்கொழும்பு தாகொன்ன பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மதியம் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். 

இதையடுத்து குறித்த பிரதேசத்திற்கு விரைந்த அதிகாரிகள் குழுவினர் மறைந்திருந்த 8 பேரையும் கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கைக் குண்டுகள், ஹெராயின் மற்றும் கேரள கஞ்ச ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.