பாடலாசிரியராகவும், நடிகராகவும் இருக்கும் பா. விஜய் ஆருத்ரா என்ற பெயரில் மீண்டும் ஒரு ஹாரர் படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் நேற்றுமுன்தினம் வெளியாகி இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பா விஜய். இதற்கு முன் ஸ்ட்ராபெர்ரி என்ற பெயரில் பேய் படத்தினை இயக்கி வெற்றிக் கண்டிருந்தார்.  அதனைத் தொடர்ந்து தற்போது ஆருத்ரா என்ற பெயரில் மீண்டும் ஒரு ஹாரர் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் இவருடன் இவருடைய குரு நாதரான  கே பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன்,நடிகை சாந்தினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக இதனை தயாரித்திருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தகவல் : சென்னை அலுவலகம்