இத்தாலி நாட்டிலிருந்து 40 சாராய போத்தல்களை சட்டவிரோதமாக நாட்டினுள் கொண்டு வந்த இரு பெண்களை கட்டுநாயக்க சுங்கப் பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் ஜா-எல மற்றும் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 33 வயதான இத்தாலி நாட்டில் தொழில் புரிபவர்களாவர்.

சுங்க மற்றும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு தடவையில் நாட்டினுள் கொண்டு வரும் மதுபானத்தின் அளவானது 2.5 லீட்டராகும்.

இச் சட்ட விதிகள் தெரியாத வெளிநாட்டு பிரஜைகள் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாட்டினுள் இவ் விதம் பெருமளவிலான மதுபான வகைகளை கொண்டு வருவதனால் அவர்களுக்கு தண்டப் பணம் மற்றும் வரி செலுத்த நேரிடுவதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.