இருபத்து நான்கு ஆண்டுகளாக உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கரு கடந்த மாதம் 25 ஆம் திகதி பெண் குழந்தையாக பிறந்துள்ளது.

அமெரிக்காவின் டென்னசி பகுதியை சேர்ந்த  பெஞ்சமின் கிம்சன் – டினா கிப்சன் தம்பதியினருக்கு திருமணமாகி சில வருடங்களாகியும் குழந்தை பிறக்காததன் காரணமாக வைத்தியரை நாடியுள்ளனர் .

டினாவை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவருக்கு செயற்கை முறை குழந்தை பேற்றை  பரிந்துரைத்துள்ளனர்.

வைத்தியர்களின் ஆலோசனைக்கிணங்கிய தம்பதியினருக்கு வைத்தியர்கள் 24 வருடங்களுக்கு முன்னர் உருவாகி உறை நிலையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்த கருவை உட் செலுத்தியுள்ளனர்.

வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் டினா கடந்த ஒன்பது மாதங்களாக இருந்து கடந்த 25ஆம் திகதி  6 பவுண்டுகள் எடையுடனும் 20 இஞ்ச் நீளமுடனும் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தைக்கு பெற்றோர் எம்மா ரென் என பெயரிடப்பட்டுள்ளது.

டினா பிறந்து 18 மாதங்களுக்கு பின்னர் உருவான கருவை அவர் சுமந்துள்ளார் என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.