வாழ்க்கைச் செலவு தொடர்­பி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை ஏற்­ப­டுத்­துதல் வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் வரட்சி போன்ற இயற்கை அனர்த்­தங்­களில் நிவா­ர­ணங்­களை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் பிர­த­ம­ரினால் முன்­வைக்­கப்­பட்ட 8 அம்­சங்­கள் அடங்­கிய தீர்வுத்திட்­டத்­திற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. 

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடகச்சந்­திப்பு நேற்று அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதன் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. 

இத­ன­டிப்­ப­டையில் வாழ்க்கைச் செலவு தொடர்­பான அமைச்­ச­ரவை உப குழு மற்றும் பொரு­ளா­தார முகா­மைத்­துவம் தொடர்­பான அமைச்­ச­ரவை செயற்­குழு ஆகிய குழுக்கள் முன்­னெ­டுத்த கலந்­து­ரை­யா­டல்­களில் பல்­வேறு தீர்­மா­னங்கள் எட்­டப்­பட்­டுள்­ளன. இந்த தீர்­மா­னங்­களை எவ்­வி­த­மான தடை­க­ளு­மின்றி முன்­னெ­டுக்க தேவை­யான செயன்­மு­றை­க­ளுக்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. வீட்டு அல­கொன்­றுக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய விலையில் அத்­தி­யா­வ­சிய பொருட்­களை வழங்­கு­வதை சாராம்சம் செய்­வ­தற்­காக உரிய அதி­கா­ரிகள் அடங்­கிய ‘குடும்ப வரவு செலவு பிரி­வொன்றை’ ஸ்தாபித்தல், குறித்த தீர்­மா­னங்­களை செயற்­ப­டுத்­து­வதன் வெற்­றி­யினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சின் செய­லா­ளர்­களின் தலை­மையில் ஏனைய உரிய அமைச்சின் செய­லா­ளர்­க­ளுடன்  கூடிய ஒருங்­கி­ணைப்பு குழு­வொன்­றினை நிய­மித்தல்,

சுப்பர் மார்க்கட், சதொச மற்றும் ஏனைய தனியார் சந்­தை­களின் ஊடாக தமிழ், சிங்­கள புது வருடம் வரை அத்­தி­யா­வ­சிய உணவு பொருட்கள் உள்­ள­டங்­கிய சலுகை பொதி­யொன்றை பகிர்ந்­த­ளிப்­ப­தற்­கான வேலைத்­திட்­ட­மொன்றை செயற்­ப­டுத்­துதல், அதற்­காக பங்­கு­கொள்­கின்ற நிறு­வ­னங்கள் மற்றும் சில்­லறை வியா­பா­ரிகள் மூலம் செலுத்­தப்­ப­டு­கின்ற வரு­மான வரியில் 50 வீதத்தை மீள் நிரப்­பு­வ­தற்கும், மின்­சார செல­விற்­காக வரிச்­ச­லு­கை­யினை பெற்றுக் கொடுப்­ப­தற்­கு­மான வேலைத்­திட்­ட­மொன்றை தயா­ரித்தல்,  தேங்காய் இறக்­கு­மதி தொடர்பில் மேற்­பார்வை செய்­வ­தற்­கான பொறுப்­பினை தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார விவ­கா­ரங்கள் அமைச்சின் செய­லா­ள­ருக்கு வழங்­குதல், தேங்காய் இறக்­கு­மதி தொடர்பில் அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்தின் மூலம் பின்­பற்­றப்­ப­டு­கின்ற செயன்­மு­றை­யினை இலங்­கை­யிலும் ஸ்தாபிப்­பது தொடர்பில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் ஒத்­து­ழைப்­பினை பெற்றுக் கொள்ளல்,

வெள்ள நிவா­ர­ணத்­துக்­காக தேசிய காப்­பு­றுதி நிதி­யத்­தினால் பெற்றுக் கொடுப்­ப­தற்கு இணங்­கி­யுள்ள நட்ட ஈட்டு தொகை மற்றும் மதிப்­பீட்டு பெறு­ம­திக்கு இடையில் காணப்­ப­டு­கின்ற வித்­தி­யா­சத்­தினை 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திக­திக்கு முன்னர் மாவட்ட செய­லா­ளர்­க­ளினால் குறித்த நபர்க­ளுக்கு பெற்றுக் கொடுத்தல் மற்றும் சீரற்ற காலநிலையினால் பயிர் செய்கை பாதிக்கப்பட் டுள்ள குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை வவுனியா மாவட்டங்க ளில் விவசாய குடும்பங்களுக்கு சலுகை வழ ங்குவதை துரிதப்படுத்துதல் ஆகிய 8 விடயங்களை எவ்விதமான தாமதமுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.