சவுதி அரேபிய நாடு குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில் பெயர் பெற்றது. ஆண், பெண் என்ற பாகுபாடின்றி தண்டனை வழங்க்கப்படும். இந்த பட்டியலில் தற்போது சீனாவும் சேர்ந்துள்ளது.

சீனாவில் குவாங் டாங் மாகாணத்தில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 10.4 தொண் அளவுக்கு போதைமருந்து பொலிஸாரால்  கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய சுமார் 16,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிகிறது.

இதில் முக்கிய குற்றாவாளிகள் 10 பேருக்கு சீன அரசு விளையாட்டு அரங்கத்தில் மக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கப்பட்டது.

கைவிலங்கிட்டபடி அழைத்துவரப்பட்ட இந்த குற்றவாளிகளை பொதுமக்கள் பார்க்கும்படி நிறுத்தப்பட்டு, அவர்களின் குற்றங்களையும் தண்டனையையும் விவரித்து, தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந் நிகழ்வால் போதைமருந்து கும்பலுக்கு ஒரு பாடமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.