வைரலாக பரவும் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட காணொளி

Published By: Priyatharshan

20 Dec, 2017 | 11:36 AM
image

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ காணொளியை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார்.  

20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காணொளியில் ஜெயலலிதா வைத்தியசாலை கட்டிலில் இருந்தபடி பழச்சாறு அருந்துவது போல் காட்சிகள் உள்ளது.

வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், 

"ஜெயலலிதா மரணத்தைக் குறித்து பல்வேறு சந்தேகங்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.  அவர் உயிருடன் இருந்தபோது அவர் முன்னால் நிற்கவே பயந்தவர்கள் இப்போது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். ஜெயலலிதாவுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறி அவதூறு பரப்பிவருகின்றனர்.

அம்மா இப்படி ஒரு சூழலில் இருந்தபோது எடுத்த வீடியோவை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லைதான். ஆனால், தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளை எங்களால் பொறுக்க முடியாமல்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம்.

இந்த வீடியோவை இப்போது வெளியிட தேர்தல் அரசியல் காரணம் அல்ல. விசாரணை ஆணையம் எங்களை விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு தருவோம் என ஏற்கெனவே கூறியிருந்தோம். எங்களை அழைக்கவில்லை .அதனால் நாங்கள் அங்கே எதையும் ஒப்படைக்க வாய்ப்பில்லை.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது நான் ஒருநாள்கூட உள்ளே சென்றதில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி, உதயகுமார், ஜெயகுமார், ஓபிஎஸ், விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளே சென்றனர். அவர்கள் நடத்திய ஆலோசனை வீடியோகூட இருக்கிறது. இன்னும் பல வீடியோக்கள் உள்ளன, தேவைப்பட்டால் வெளியிடுவோம் என அவர் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று தொடங்கிய சர்ச்சை இன்னும் முடியவில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார் என இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகக் குழு இயக்குநர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறியிருந்தார். இந்நிலையில்,  இன்று டிடிவி தினகரன் ஆதரவாளர் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் கூறியபோதெல்லாம் டிடிவி தினகரன், "எங்களிடம் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சையே அளிக்கப்பட்டது. ஒரு முதல்வராக இருந்தவரை அந்த கோலத்தில் பார்க்க யாரும் விரும்பமாட்டார்கள் என்பதாலேயே அதை வெளியிடவில்லை. இருப்பினும், தேவைப்பட்டால் அந்த வீடியோவை வெளியிடுவோம்.

நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இன்று புதன்கிழமை டிடிவி தினகரன் தரப்பு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை இப்போது அவர்கள் வெளியிடக் காரணம் ஆர்.கே.நகர் தேர்தலில் ஏதாவது ஆதாயம் தேட முடியுமா என்பதற்காகவே என சில இந்திய அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17