ஒரு­வரின் மூளையில் ஏற்­படும் காயங்­க­ளா­னது அவரைக் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­படும் ஒரு­வ­ராக எதிர்­கா­லத்தில் மாற்­று­வ­தாக  புதிய ஆய்­வொன்று கூறு­கி­றது.

மூளையில் தார்­மீக ரீதியில் தீர்­மா­ன­மெ­டுக்கும் பகு­தியில் ஏற்­படும்  சேதங்­க­ளா­னது  காயத்­துக்­குள்­ளா­னவர் சட்­டத்தை மீறும் செயற்­பா­டு­களில் ஈடு­படும் அபா­யத்தை அதி­க­ரிப்­ப­தாக  அமெ­ரிக்க மஸா­சு­ஸெட்­ஸி­லுள்ள ஹவார்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வு கூறு­கி­றது.

மூளையில் தார்­மீக சிந்த­னை­க­ளுக்கு பொறுப்பா­க­வுள்ள  தனி­யொரு வலைப்­பின்னல் கட்­ட­மைப்பில் ஏற்படும் காயங்கள்  பாதிக்­கப்­பட்டநபர்  சட்­டத்தை மீறும் செயற்­பா­டு­களில்தொடர்ந்து  நிரந்­த­ர­மாக ஈடு­பட வழி­வகை செய்­கி­றது  என  மேற்­படி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

 தமது இந்த ஆய்­வா­னது எதிர்­கா­லத்தில் குற்­றச்­செ­யல்­களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது நடத்தையை மாற்றிக் கொள்வதற்கு சிகிச்சையளிக்க  உதவும் என  நம்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.