தனித்து வாழும் ஆண்­க­ளுக்கு  குடும்­பத்­தி­ன­ரு­டனும் உற­வி­னர்­க­ளு­டனும் வாழும் ஆண்களை விடவும் நீரி­ழிவு ஏற்­படும் அபாயம் இரு மடங்கு அதிகம் என புதிய  ஆய்­வொன்று கூறு­கி­றது.

  அத்­துடன் அத்­த­கைய ஆண்கள் நெருங்­கிய நண்­ப­ரொ­ரு­வரை இழக்கும் போது அவர்­க­ளுக்கு நீரி­ழிவு ஏற்­படும் அபாயம் மேலும் 10  சத­வீ­தத்தால் அதி­க­ரிப்­ப­தாக நெதர்­லாந்­தி­லுள்ள மாஸ்ரிச்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வின் முடி­வுகள் தெரி­விக்­கின்­றன.

   நெதர்­லாந்தைச் சேர்ந்த 40  வய­துக்கும் 75  வய­துக்கும் இடைப்­பட்ட வய­து­டைய ஆண்கள் மற்றும் பெண்­களை உள்­ள­டக்கி 2,861 பேரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட  மேற்­படி ஆய்வின் பிர­காரம் நீரி­ழிவால்  பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 56  சத­வீ­தத்­தி­ன­ராக ஆண்­களும்  44 சத­வீ­தத்­தி­ன­ராக பெண்­களும்  உள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

 இந்­நி­லையில்  தனித்து வாழும் ஆண்­களும் பெண்­களும்  நண்­பர்கள் மற்றும் குடும்­பத்­தினர் வாழும் இடத்­திற்கு அருகில் வசிப்­பது  மேற்­படி பாதிப்பை  பெரிதும் குறைப்­ப­தாக அமையும் என  ஆய்­வா­ளர்கள்  தெரி­விக்­கின்­றனர்.

தனித்து வாழும் ஆண்கள்  எனும் போது திரு­ம­ண­மா­காது தனித்து வாழ்­வதை மட்டும் குறிப்­பி­ட­வில்லை எனவும்  இது முழு சமூக வலை­ய­மைப்­புடன் அவர்­க­ளுக்­குள்ள உற­வு­களை கருதும் எனவும் தெரி­விக்கும்  ஆய்­வா­ளர்கள்,  குடும்ப  அங்­கத்­த­வர்கள் மற்றும் சமூ­கத்­துடன் ஆண்­க­ளுக்­குள்ள  உற­வு­க­ளா­னது அவர்­களது ஆரோக்­கி­யத்தில் பெரிதும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாகக் கூறு­கின்­றனர்

 முக்­கிய தீர்­மா­னங்­களில் ஆத­ர­வ­ளிப்­ப­வர்கள் இருப்­பது ஆண்கள் மற்றும் பெண்­க­ளது உடல் ஆரோக்­கி­யத்­துக்கு  அவ­சி­ய­மா­க­வுள்­ள­தாக  குறிப்­பிட்­டுள்ள மேற்­படி ஆய்­வா­ளர்கள்,   ஒரே இடத்தில் அமர்ந்து தொழில் புரியும் நிலைமை,  உடற் பருமன்,  உடற் பயிற்சியின்மை  உணவுப் பழக்கத்தினாலான முறைகேடுகள் என்பனவும் நீரிழிவு ஏற்படுவதற்கு காரணமாவதாக தெரிவிகின்றனர்.