இந்­தி­யா­வுக்கு கிரிக்கெட் சுற்­றுலா மேற்­கொண்­டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி­ இந்­திய கிரிக்கெட் அணி­யுடன் 3 போட்­டி­களைக் கொண்ட இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்­கேற்­கின்­றது. இதன் முத­லா­வது போட்டி எதிர்­வரும் 9 ஆம் திக­தி­யன்று புனேயில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

ஏனைய இரண்டு போட்­டி­களும் 12 ஆம் திக­தி­யன்று ராஞ்­சி­யிலும், 14ஆம் திக­தி­யன்று விசா­க­பட்­டி­ணத்­திலும் இரவு 7.30 மணிக்கு மின்­னொ­ளியில் நடை­பெறும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக லசித் மலிங்க காணப்­ப­டு­கின்ற போதிலும், காயம் கார­ண­மாக அவர் பங்­கேற்­கா­ததால் தினேஷ் சந்­தி­மா­லுக்கு இலங்கை அணியின் தலை­மைத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், காயம் கார­ண­மாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணித்­த­லை­வ­ரான எஞ்­சலோ மெத்­தி­யூஸும் இத் தொடரில் பங்­கேற்­க­வில்லை. அத்­துடன் உள்ளூர் கிரிக்கெட் போட்­டி­களில் ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­திய வேகப்­பந்து வீச்­சா­ள­ரான தில்­ஹார பெர்­னாண்டோ, மூன்­றரை ஆண்­டு­க­ளுக்குப் பின்னர். இலங்கை கிரிக்கெட் அணிக்கு உள்­வாங்­கப்­பட்­டுள்ளார்.

இவர், கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திக­தி­யன்று பாகிஸ்தான் அணிக்­கெ­தி­ரான டெஸ்ட் போட்­டி­யி­லேயே இறு­தி­யாக விளை­யா­டினார்.

மேலும், உள்ளூர் கிரிக்கெட் போட்­டி­களில் பந்­து­வீச்சு மற்றும் துடுப்­பாட்டம் என சகல துறை­க­ளிலும் பிர­கா­சித்து வரும் சீக்­கு­ககே பிர­சன்­னவும் இந்­திய அணிக்­கெ­தி­ரான இலங்கை குழாமில் இணைக்­கப்­பட்­டுள்­ளமை விஷேட அம்­ச­மாகும்.

இவர்­களைத் தவிர அசேல குண­ரட்ண, தசுன் சானக்க, கசுன் ரஜித மற்றும் பினுர பெர்­னாண்டோ ஆகியோர் அணிக்குள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர். இதில் கசுன் ரஜித்த, அசேல குண­ரட்ண ஆகியோர் முதல் முறை­யாக இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்க்­கப்­பட்­ட­வர்­க­ளாவர்.

இத் தொடரில் பங்­கு­பற்றும் இலங்கை குழாத்­திற்கு லஹிரு திரி­மான்ன, அஜந்த மெண்டிஸ், நுவன் குல­சே­கர , ஷெஹான் ஜய­சூ­ரிய, கித்­ருவன் வித்­தா­னகே, சுரங்க லக்மால், இசுறு உதான ஆகியோர் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இந்­தி­யாவின் முன்­னணி வீர­ரான விராட் கோஹ்­லிக்கு இத்­தொ­டரில் ஓய்வு அளிக்­கப்­பட்­டுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யா­வு­ட­னான தொடரில் சிறப்­பாக துடுப்­பெ­டுத்­தா­டி­யி­ருந்த மனிஷ் பாண்டே மற்றும் சகல துறை வீர­ரான ஹார்திக் பாண்­டியா போன்ற இளம் வீரர்­க­ளுக்கும் இந்­திய கிரிக்கெட் குழாமில் இடம் கிடைத்துள் ­ளது. அத்­துடன் சிரேஷ்ட வீரர்­க­ளான ஹர்­பஜன் சிங், ஆஷிஸ் நெஹ்ரா, யுவராஜ் சிங் ஆகி­யோ­ருக்கும் வாய்ப்­ப­ளிக்­கப் பட் ­டுள்­ளது. உள்ளூர் போட்­டி­களில் சிறந்த

ஆற்­றல்­களை வெளிப்­படுத்­தி­யுள்ள பவான் நேகிக்கும் இடம் கிடைத்­துள் ­ளது.

இது­வரை இரு அணி­களும் 6 தட­வை கள் ஒன்­றை­யொன்றை எதிர்த்­தாடி தலா மூன்று போட்­டி­களில் வெற்றி பெற்று சம­நி­லையில் உள்­ளன. ஐ.சி.சி தர­வ­ரி­சையில் இந்­தியா முத­லா­வது இடத்­திலும் இலங்கை 3ஆவது இடத்­திலும் உள்­ளது.

இரு அணி­க­ளிலும் இளம் வீரர்கள் உள்­ளிட்ட சக­ல­துறை வீரர்கள் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றனர்.

அத்­துடன் இரு அணிக­ளிலும் அனு­பவ வீரர்­க­ளுக்கும் இடம­ளிக்­கப்­பட்­டுள் ­ளமை குறிப்­பி­டத்தக்கது. இத்­தொ­ட­ரானது, எதிர்­வரும் ஆசியக் கிண்ணத் தொடர் மற்றும் உலகக் கிண்ண இரு­ப­துக்கு இரு­பது

தொட­ருக்கு முன்­னோ­டி­யாக அமையும். ஆகவே, தத்­த­மது அணி­களை பிர­தி­நிதித்­ து­வப்­ப­டுத்­து­வ­தற்கு இளம் வீரர்கள் மற்றும் அனு­பவ வீரர்­க­ளுக்­கி­டையே ஆரோக்­கி­ய­மான போட்டி நிலவும் என்­பதில் எது­வித சந்­தே­கமும் இல்லை.

இலங்கை கிரிக்கெட் அணி விபரம்

தினேஷ் சந்­திமால் (அணித்­த­லைவர்), தில­க­ரட்ண டில்ஷான், தனுஷ்க குண­தி­லக்க, தசுன் சானக்க, சாமர கப்­பு­கெ­தர, அசேல குண­ரட்ன, மிலிந்த சிறி­வர்­தன, சீக்­குகே பிர­சன்ன, திசர பெரேரா, சச்­சித்ர சேனா­நா­யக்க, தில்­ஹார பெர்­னாண்டோ, ஜெப்ரி வென்டர்சே, துஷ்மன்த சமீர, பினுர பெர்னாண்டோ, கசுன் ரஜித

இந்திய கிரிக்கெட் அணி விபரம்

மஹேந்திர சிங் டோனி (அணித் தலைவர்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அஜின்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரிட் பூம்ராஹ், ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், மொஹமட் சமி, பவான் நேகி.