(லியோ நிரோஷ தர்ஷன்)

தலைமை பதவியை வழங்குவதற்கு அவர் முட்டாளும் அல்ல அவ்வாறு வழங்கியும் நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சோடிக்கப்பட்ட பொய்யாக பல கருத்துக்கள் உலாவுவதாகவும் குறிப்பிட்டார். 

சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை தருவதாக கூறியதாகவும் கூறுகின்றனர்.  அவ்வாறு வழங்குவதற்கு அவர்கள் முட்டாள்களும் அல்ல. அதே போன்று அவ்வாறானதொரு வாய்ப்பு வரும் போது நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல. 

உள்ளுராட்சிமன்ற தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.