இலங்கை கனிஷ்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கோல்ப் சம்­பி­யன்ஷிப் தொடரின் 2017 ஆம் ஆண்­டுக்­கான போட்­டியில், ஆண்கள் பிரிவில் வினோத் வீர­சிங்க மற்றும் பெண்கள் பிரிவில் தானியா மினெல் ஆகியோர் தெரி­வா­கினர். 

வினோத் வீர­சிங்க பெற்­றுக்­கொண்ட 77 புள்­ளிகள், ஆண்­க­ளுக்­கான தங்கப் பிரிவின் வெற்­றிக்குப் போது­மா­ன­தாக இருந்­தது. 

ஆர்மன்ட் பிளேமர் கல்­தே­ராவின் 9 அடி­க­ளுக்கு இது சம­மாக இருந்­தது. பெண்­க­ளுக்­கான தங்கம் மற்றும் வெள்ளிப் பிரி­வு­களில் இறுதி வரை கடு­மை­யான போட்டி நில­வி­யது. 

தானியா மினெல் பால­சூ­ரிய, கைலா பெரேரா ஆகியோர் இதில் கடு­மை­யாக மோதிக் கொண்­டனர். இணைந்த வெற்­றி­யா­ளர்­க­ளாக தானி­யாவும், கைலாவும் ஆரம்பம் முதல் முத­லா­வது குழி­யி­லி­ருந்து இறுதி வரை ஆர்­வத்தை தக்க வைத்துக் கொண்­டனர். இரண்­டா­வது குழியில், கைலா ஒரு அடியைத் தவற விட்டார். அதன் மூலம் தானியா முன்­ன­ணிக்கு வந்தார். இந்த இடை ­வெ­ளியை 9ஆவது குழியின் போது, தானியா இரண்­டாக மாற்றிக் கொண்டார். 

தானியா 10 ஆவது குழியின் போது ஐந்து அடிகள் முன்­ன­ணியில் திகழ்ந்­தார். கைலா 11ஆவது துளையில் கடு­மை­யாகப் போட்­டி­யிட்டு, முன்­ன­ணிக்கு வந்து சம­நி­லையை அடைந்து கொண்டார். 

ஆனால், 12ஆவது அடியின் போது மீண்டும் இரண்டு அடி­க­ளினால் பின்­ன­டைவு கண்டார். 16, 17ஆம் குழி­களில் இரு­வரும் சம­நி­லையில் இருந்­தனர். 18ஆவது துளையில் இறுதி முடிவு காணப்­பட்­டது. அப்­போது, இரண்டு அடிகளினால் தானியா முன்னணி வகித்து,பெண்களுக்கான  கனிஷ்ட பிரிவில் சம்பியனானார்.