பெர்த்தில் நடை­பெற்ற ஆஷஸ் தொடரின் 3 ஆவது டெஸ்டில் அவுஸ்­தி­ரே­லியா இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்­பற்­றி­யுள்­ளது.

அவுஸ்­தி­ரே­லிய – இங்­கி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான  ஐந்து போட்­டிகள் கொண்ட் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடை­பெற்று வரு­கி­றது. 

பிரிஸ்பேன், அடி­லெய்டில் நடை­பெற்ற முதல் இரண்டு டெஸ்ட்களிலும் அவுஸ்­தி­ரே­லியா வெற்றி பெற்ற நிலையில், 3-ஆவது போட்டி பெர்த் மைதா­னத்தில் கடந்த 14ஆம் திகதி தொடங்­கி­யது.

இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இங்­கி­லாந்து அணி துடுப்­பாட்டத்தை தேர்வு செய்­தது. 

அதன்­படி முதலில் ஆடிய இங்­கி­லாந்து 403 ஓட்­டங்­களை சேர்த்­தது. பின்னர் முதல் இன்­னிங்ஸை தொடங்­கிய அவுஸ்­தி­ரே­லியா 9 விக்­கெட்­டுக்­களை இழந்து  662 ஓட்­டங்­களைக் குவித்து ஆட்­டத்தை நிறுத்திக் கொண்­டது. ஸ்மித் இரட்டைச் சதம் அடித்தார்.

முதல் இன்­னிங்ஸில் 259 ஓட்­டங்கள் பின்­தங்­கிய நிலையில் இங்­கி­லாந்து 2ஆவது இன்­னிங்ஸை தொடங்­கி­யது. 

தொடக்க வீரர் அலஸ்டயர் குக் 14, ஸ்டோன் மேன் 3, ஜோ ரூட் 14 என சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க 4ஆவது  நாள் ஆட்டநேர முடிவில் இங்­கி­லாந்து 4 விக்­கெட்­டுக்­களை இழந்து 132 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. மலன் (28), பேர்ஸ்டோவ் (14) ஆகியோர் களத்தில் இருந்­தனர்.

நேற்று ஐந்­தா­வது நாள் ஆட்டம் தொடங்­கி­யது. மழை­கா­ர­ண­மாக காலையில் ஆட்டம் தொடங்­கு­வதில் தாமதம் ஏற்­பட்­டது. 

மதிய உணவு இடை­வேளை வரை ஆட்டம் தொடங்­க­வில்லை. மதிய உணவு இடை­வே­ளைக்குப் பின் ஆட்டம் தொடங்­கி­யது. ஆட்டம் தொடங்­கி­யதும் பேர்ஸ்டோவ் (14) ஆட்­ட­மி­ழந்தார். 

அடுத்து வந்த மொயீன் அலி (11) , கிறிஸ் வோக்ஸ் (22), ஓவர்டன் (12), பிராட் (0) என அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழக்க, தாவித் மலன் மட்டும் 54 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்தார்.  இதனால் 2ஆவது இன்­னிங்ஸில் 218 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

ஆஸி. இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3–-0 என அவுஸ்திரேலியா கைப்பற்றி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.