ஆர்.கே.நகரில் இன்­றுடன் தேர்தல் பிர­சாரம் முடி­வ­டைய உள்­ளதால், வேட்­பா­ளர்கள் இறு­திக்­கட்ட பிர­சா­ரத்தில் சுறு­சு­றுப்பாக ஈடு­பட்­டுள்­ளனர்.  முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவின் மறைவின் கார­ண­மாக அவரின் தொகு­தி­யான ஆர்.கே நகரில் இடைத்­தேர்தல் நடை­பெற உள்­ளது. 

இன்­றுடன் பிர­சா­ரங்கள் அனைத்தும் முடி­வ­டைய வேண்டும் என்­பதால்  வேட்­பா­ளர்­களின் இறு­திக்­கட்ட பிர­சாரம் சூடு பிடித்­துள்­ளது.

தி.மு.க. சார்பில் மரு­து­கணேஷ், அ.தி.மு.க.சார்பில் மது­சூ­தனன், நாம் தமிழர் கட்சி வேட்­பாளர் கலைக்­கோட்­டு­தயம், பா.ஜ.க . சார்பில் கரு.நாக­ராஜன் ஆகி­யோரும், சுயேட்சை வேட்­பா­ள­ராக டி.டி.வி தின­க­ரனும் களத்தில் உள்­ளனர். இவர்கள் போக பல வேட்­பா­ளர்கள் களத்தில் இருந்­தாலும் தி.மு.க., அ.தி.மு.க., சுயேட்சை வேட்­பாளர் தின­கரன் ஆகி­யோ­ரி­டையே மும்­முனை போட்டி நிலவி வரு­கி­றது. இந்த தேர்­தலில் தி.மு.க., விடு­தலை சிறுத்­தைகள், ம.தி.மு.க., இந்­திய கம்­யூனிஸ்ட் ஆகிய கட்­சிகள் தி.மு.க.வை ஆத­ரித்து உள்­ளன. தங்கள் பலத்தை காட்ட ஆளும்­கட்­சி­யான அ.தி.மு.க அமைச்­சர்­களை பிர­சா­ரத்தில் இறக்கி உள்­ளது. இவர்­க­ளோடு சுயேட்­சை­யாக குக்கர் சின்­னத்தில் போட்­டி­யிடும் டி.டி.வி தின­கரன் கடு­மை­யாக போட்டி போட்டு பிர­சாரம் செய்து வரு­வதால் ஆர்.கே நகரில் யார் வெற்றி பெறு­வார்கள் என்று பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. ஒரு­புறம் கடு­மை­யான பிர­சாரம் நடந்து வந்­தாலும் மறு­பக்கம் தேர்தல் ஆணை­ய­கத்தின் தீவிர கண்­கா­ணிப்­பையும் மீறி ஆர்.கே.நகரில் வாக்­கா­ளர்­க­ளுக்கு பணப்­பட்­டு­வாடா நடப்­ப­தாக, தி.மு.க சார்பில் அ.தி.மு.க மீதும், டி.டி.வி தின­கரன் அணியின் மீதும் புகார் அளிக்­கப்­பட்டு உள்­ளது. இதனால் ஆர்.கே நகரில் கண்­கா­ணிப்பு பலப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. இந்­நி­லையில், தேர்தல் வாக்­குப்­ப­தி­வுக்கு 48 மணி நேரத்­திற்கு முன்­ன­தாக பிர­சாரம் முடித்­துக்­கொள்ள வேண்டும் என்கிற விதி இருப்பதால், ஆர்.கே.நகரில் இன்று  மாலையோடு பிரசாரம் முடிவடைய உள்ளது. இதனால், வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.