கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள கடற்­படை லெப்­டினன்ட் யோஷித ராஜ­ப­க் ஷ­வி­னு­டைய 12,000 மின்­னஞ்சல் செய்­திகள் குறித்தும் பொலிஸ் பாரிய நிதி மோசடிப் பிரி­வினர் தீவிர விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சீ.எஸ்.என். தொலைக்­காட்சி சேவையின் சிறு முடிவு எடுக்கும் வகையில் யோஷித்த செயற்­பட்­ட­மையை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லான தக­வல்கள் அவ­ரது மின்­னஞ்சல் செய்­திகள் மூலம் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் அவற்­றையும் நீதி­மன்­றத்­துக்கு சமர்ப்­பிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை பாரிய நிதி மோசடி பிரி­வினர் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

யோஷித ராஜ­பக் ஷ கடந்த சனிக்­கி­ழமை பாரிய நிதி மோசடி பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டார். இவர் கொழும்­பி­லுள்ள கடற்­படை தலை­மை­ய­கத்தில் வைத்து சுமார் ஆறு மணித்­தி­யா­லங்கள் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்­னரே கைது செய்­யப்­பட்டார்.

பாரிய நிதி மோசடி தொடர்­பாக நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்­வுக்கு அழைத்து விசா­ரணை செய்­யப்­ப­டு­வதே வழமை. ஆனால், யோஷித ராஜ­பக் ஷ இதற்கு மாறாக கடற்­படை தலை­மை­ய­கத்தில் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட யோஷித்த ராஜ­பக் ஷ அடங்­க­லான ஐவர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை அவர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.