அமைச்சர் மனோ­விடம் பிறந்­தநாள் பரிசு கோரிய பிர­தமர் ரணில்

Published By: Robert

19 Dec, 2017 | 10:28 AM
image

கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­தலில் தனித்துப் போட்­டி­யி­டு­வ­தற்கு அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்குக் கூட்­டணி தீர்­மா­னித்­தி­ருந்த போதிலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார்.

அமைச்சர் மனோ கணே­சனின் பிறந்த தினம் நேற்­று­முன்­தி­ன­மாகும். அன்று காலை மனோ கணே­ச­னுடன் தொலை­பே­சியில் உரை­யா­டிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிறந்த நாள் வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­த­துடன் தனக்கு பிறந்த நாள் பரிசு வழங்­கு­மாறு அமைச்­ச­ரிடம் கோரி­யுள்ளார். உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்­கான சம்­ம­தத்தை பிறந்த நாள் பரி­சாக தனக்குத் தரு­மாறு பிர­தமர் கோரி­யுள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்தக் கோரிக்­கையை அடுத்து நேற்­றுமுன் தினம் இரவு அமைச்சர் மனோ கணேசன் பிர­த­மரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். நேற்று இரவும் மீண்டும் இவ்­வி­டயம் குறித்து கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றுள்­ளது. 

கொழும்பு மாந­கர சபைத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டு­வது குறித்து தமிழ் முற்­போக்குக் கூட்­டணி பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தது. இதன்­போது தொகுதிப் பங்­கீடு விட­யத்தில் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் கோரிக்­கைக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தி­நி­திகள் உரிய இணக்­கப்­பாட்டைத் தெரி­வித்­தி­ருக்­க­வில்லை. இதனால் இந்தப் பேச்சில் இழு­பறி நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. 

இத­னை­ய­டுத்து கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­தலில் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் சின்­ன­மான ஏணிச் சின்­னத்தில் தனித்து கள­மி­றங்­கு­வ­தற்கு முடிவு செய்­தி­ருந்­தது. தனித்துப் போட்­டி­யி­டு­வ­தற்­கான ஆயத்­தங்­களை முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ­க­ணேசன் மேற்­கொண்­டி­ருந்தார். 

இந்த நிலை­யில்தான் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் மனோ கணே­ச­னுடன் தொடர்­பு­கொண்டு ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட வரு­மாறு மீண்டும் அழைப்பு விடுத்­தி­ருக்­கிறார். தனக்குப் பிறந்த நாள் பரிசு வழங்­கு­மாறும் அவர் கோரி­யி­ருக்­கின்றார். 

இத­னை­ய­டுத்து ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் பேச்­சுக்கள் தொடர்ந்து வருகின்றன. தொகுதிப் பங்கீட்டில் இணக்கம் காணப்பட்டால் தமிழ் முற்போக்குக் கூட்டணி கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும். இல்லையேல் தனித்து ஏணிச் சின்னத்தில் களமிறங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43