ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தொற்று காரணமாக ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை  வளாகத்தின் நான்கு பீடங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களும் இன்று மாலை 4 மணிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.