எதிர் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு அரசியல் ரீதியில் விழிப்பூட்டும் செயற்திட்டம் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஒன்றிணைந்து பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் குழுவினால் இவ் விழிப்பூட்டல் செயலமர்வு நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே இன்று வவுனியாவிலும் இடம்பெற்றது.

பெண்கள் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி எமல்டா சுகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழிப்பூட்டல் செயலமர்வை முன்னெடுத்திருந்தார். இதில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடவுள்ள பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நாட்டில் 53 சதவீதமாக உள்ள பெண்கள் அரசியலிலும் முன்னால்  வந்து தமக்கு எதிரான பிரச்சனைகளுக்கு அவர்களே குரல் கொடுக்க வேண்டும் என இதன்போது பெண்கள் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளர் எமல்டா சுகுமார் தெரிவித்தார்.