மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதூர் என்னும் இடத்தில் வசித்து வந்த இரு சிறுவர்கள் காணமல்போயுள்ளதாக மட்டக்களப்பு பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சுசீலா தெரிவித்தார்.

கணவன் - மனைவிக்கு இடையில் இடம்பெற்ற தகராறு காரணமாக சிறுவர்களை அவர்களது தந்தை  அழைத்து சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதனால் சிறுவர்களின் நலன்கருதி இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த சிறுவர்களை நேரத்திற்குநேரம் பல இடங்களில் இடம்மாற்றுவதால் பொதுமக்கள் அவர்களைக் கண்டறிய பொதுமக்கள் உதவ வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது இடம்பெற்று வரும் சமூக சீர்கேடு காரணமாக சிறுவர்கள் பாதுகாக்கப்படவேண்டும். அகவே குறித்த இரு சிறுவர்களை மீட்பதற்கு பொதுமக்கள் உதவி வழங்கி பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கக் கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.