இரு துண்டுகளானது மோட்டார் சைக்கிள் : இளைஞன் படுகாயம்

Published By: Priyatharshan

18 Dec, 2017 | 10:44 AM
image

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள புகையிரதக் கம்பத்துடன் மோதி மோட்டர் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, ஈரப்பெரியகுளம், அவுசப்பிட்டிய பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து புகையிரத பாதையில் இருந்த கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதன்போது தூக்கி வீசப்பட்ட மோட்டர் சைக்கிள் இரண்டாக உடைந்ந நிலையில் முன்னே சென்ற காருடன் மோதி மீண்டும் விபத்துக்குள்ளானது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே குறித்த மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற 25 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33