கண்டி - உடுதும்பறை பிரதேசத்தில் வயல் நிலம் ஒன்று நேற்று முதல் கீழிறங்கி உள்ளதாக அப் பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக இப் பிரதேசத்தில் நிலத்தில் வெடிப்பொன்று  காணப்பட்டதாகவும் நேற்று மேற்படி வயற் பிதேசத்தில்  சுமார் 5 அடி அளவில் கீழிறங்கி உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதி பணிப்பாளர்  இந்திக்க ரணவீரவிடம் வினவியபோது,

" இதுதொடர்பில் தாம் இன்னும் அறிய வில்லை, இதன் பின்னர் இதுதொடர்பில் விசாரணை ஒன்று மேற்கொள்ள உள்ளோம். இருந்தபோதும் இது ஒரு சாதாரண நிலையே ஆகும்." என்று  தெரிவித்தார்.