ஐ.நா. ஆணையாளர் நாயகம் இன்று வடக்கு, கிழக்கு விஜயம்

Published By: Raam

07 Feb, 2016 | 09:58 AM
image

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் – ஹுசைன் நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­ மொன்றை மேற்­கொண்டு நேற்­றைய தினம் இலங்கை வந்து சேர்ந்தார்.

நேற்­றுக்­காலை 8.30க்கு ஈ.கே 650 என்ற பிரத்­தி­யேக விமானத்தில் வந்து சேர்ந்த ஐ.நா. ஆணை­யாளர் நாய­கத்தை வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் வர­வேற்று அழைத்துச் சென்­றனர்.

அவர், இன்று காலை வடக்­கிற்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். இவரது வடக்கு விஜ­யத்­தின்­போது வட­மா­காண ஆளுநர், வட­மா­காண முத­ல­மைச்சர், சிவில் சமூக உறுப்­பி­னர்கள், பிர­தி­நி­திகள், தேசிய ஆலோ­சனை

பணிக்­குழு உறுப்­பி­னர்கள் மற்றும் பாதிக்­கப்­பட்ட மக்கள் ஆகி­யோரைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­ட­வுள்ளார்.

மேலும், இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­படும் உள்­ளக விசா­ரணைப் பொறி­முறை செயற்­பாட்டில் வட­மா­கா­ணத்தின் பங்­க­ளிப்பு முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக இருக்­கு­மென கரு­தப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே செயிட் அல் ஹுசைன் வட­மா­காண முதல்­வ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வி­ருக்­கின்றார்.

அதற்­க­மைய, இன்று காலை 9 மணி­ய­ளவில் யாழ்ப்­பாணம் வரும் ஹுசைன் வட­மா­காண ஆளுநர் பளி­ஹக்­கார மற்றும் ஆளு­நரின் செய­லாளர் இளங்­கோவன் ஆகி­யோரை காலை 9.30 மணி­ய­ளவில் சந்­திக்­க­வுள்ளார்.

தொடர்ந்து வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை அவ­ரு­டைய அலு­வ­ல­கத்­திற்கு சென்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டலை மேற்­கொள்­ள­வுள்ளார்.

குறித்த சந்­திப்பைத் தொடர்ந்து 12 மணி­ய­ளவில் மனித உரிமை ஆணை­யாளர் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் சந்­திக்­க­வுள்ளார். தொடர்ந்து யாழில் அமைந்­துள்ள உலக உணவு ஸ்தாபன வளா­கத்தில் முற்­பகல் 11.30 மணி­ய­ளவில் சிவில் சமூக உறுப்­பி­னர்­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­துடன் யாழில் அமைந்­துள்ள ஐ.நா. உப அலு­வ­ல­கத்தில் பிற்­பகல் 2.45 மணி­ய­ளவில் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். இறு­தி­யாக மாலை 6 மணி­ய­ளவில் குறித்த அலு­வ­லக கட்­ட­டத்தில் தேசிய ஆலோ­சனை பணிக்­கு­ழு­வி­ன­ருடன் சந்­திப்பை மேற்­கொண்டு கலந்­து­ரை­யா­டலை மேற்­கொள்­ள­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ஹுசைனை சந்­திப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி தரு­மாறு காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­களால் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மற்றும் யாழ்ப்­பா­ணத்தில் அமைந்­துள்ள ஐ.நா. உப அலு­வ­லக அதி­காரி ஆகி­யோ­ரிடம் மகஜர் ஒன்று நேற்று முன்­தினம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதைத்­தொ­டர்ந்து, திரு­கோ­ண­ம­லைக்கு விஜயம் செய்­ய­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர், அங்­குள்ள விமா­னப்­படை முகாமை பார்­வை­யி­ட­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சு கூறி­யுள்­ளது.

பின்னர் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் ஆளுநர் ஒஸ்டின் பெர்­னாண்டோ ஆகி­யோரை சந்­தித்து ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் கலந்­து­ரை­யா­ட­வுள்ளார்.

திருகோணமலையிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

8 ஆம் திகதி காலை கண்டிக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், ஶ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் செய்வதுடன், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58