இலங்கை தேயிலை இறக்குமதியில் ரஷ்ய அரசாங்கம் விதித்துள்ள தற்காலிக தடையினை நீக்கக்கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்ய  அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் ஊடாகவும் அரசாங்கம் பேச்சுவாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய தினம் ரஷ்ய  அரசாங்கம் தமது காரணத்தினை முன்வைக்கும் பட்சத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் மூவர் அடங்கிய குழுவும் ரஷயாவிற்கு பயணிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைகளில் ஒருவகை பூச்சியினம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்  இதனையடுத்து  இலங்கையின் தேயிலைகளை இறக்குமதி செய்ய  ரஷ்ய அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்து இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.