தலைமன்னார், பேசாளை கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பேசாளை பகுதியில் மீன் பிடிக்கச் சென்றபோது குறித்த படகு கவிழ்ந்துள்ளது.

இதேவேளை, காணாமல் போன மீனவரைத் தேடும் பணியில் பொலிஸாரும், பொது மக்களும் ஈடுபட்டுள்ளனர்.