இலங்கை மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் வெற்­றி­யா­ளரை தீர்­மா­னிக்கும் 3 ஆவதும் இறு­தி­யு­மான போட்டி இன்று இலங்கை நேரப்­படி பிற்­பகல் 1.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. நடை­பெற்று முடிந்த இரு போட்­டி­களில் முதல் போட்­டியில் திசர பெரேரா தலை­மை­யி­லான இலங்கை அணி வெற்றி பெற்­ற­துடன், இரண்­டா­வது போட்­டியில்  ரோஹித் ஷர்மா தலை­மை­யி­லான இந்­திய அணி வெற்றி பெற்­றது.

விசா­கப்­பட்­டி­ணத்தின் வை. எஸ். ராஜ­சே­கர ரெட்டி விளை­யாட்­ட­ரங்கில் பக­லி­ரவுப் போட்­டி­யாக நடை­பெறும் இப்­போட்­டியில் இலங்‍கை அணி வெற்றி பெற்றால், இலங்கை கிரிக்கெட் வர­லாற்றில் இந்­திய அணியை அதன் சொந்த மண்ணில் தொட­ரொன்றை கைப்­பற்­றிய முதல் சந்­தர்ப்­ப­மாக பதி­வாகும்.

எவ்­வா­றா­யினும், சர்­வ­தேச ஒருநாள் தர­வ­ரி­சையில் இரண்டாம் இடத்­தி­லுள்ள இந்­திய அணி, அண்­மைக்­கா­ல­மாக விளை­யா­டி­வரும்  போட்­டி­களில் பெரும்­பாலும் வெற்­றி­யையே ஈட்டி வரு­கின்­றது. எனினும், இலங்கை அணி அண்­மை­க்கா­ல­மாக விளை­யாடி வரும் போட்­டி­களில் தொட­ரொன்றை கூட வெற்றி பெற்­ற­தில்‍லை. இதில் தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக 5 க்கு 0 என்ற கணக்­கிலும்,பங்­க­ளா‍­தே­ஷுக்கு  எதி­ராக 1 க்கு 1 என்ற கணக்­கிலும், ஸிம்­பாப்வேக்கு எதி­ராக 3க்கு 2 என்ற கணக்­கிலும் , பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக 5க்கு 0 என்ற கணக்­கிலும் போட்­டியை நிறைவு செய்­தி­ருந்­தது. இதில், இலங்கை தனது சொந்த மண்ணில் ஸிம்­பாப்வே, இந்­தியா சர்­வ­தேச ஒருநாள் தொடர்­களும் உள்­ள­டங்கும்.

தீர்­மா­ன­மிக்க இன்­றைய போட்­டியில் இலங்கை அணியின் இட­துகை துடுப்­பாட்ட வீர­ரான  லஹிரு திரி­மான்­ன­வுக்குப் பதிலாக மற்­று­மொரு இடது கை துடுப்­பாட்ட வீர­ரும் அதி­ரடித் துடுப்­பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா களமிறங்குவார் என ‍எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அணியில் வேறு சில மாற்றங்களும் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.