டயலொக் சம்­பியன்ஸ் லீக் 2017 சம்­பியன் பட்­டத்தை சூடப்­போகும் அணியைத் தீர்­மா­னிக்­க­வல்ல இரண்டு முக்­கிய கால்­பந்­தாட்டப் போட்­டிகள் இன்று நடை­பெ­ற­வுள்­ளன.

இவ் வருட சம்­பியன் பட்­டத்தை சூடு­வ­தற்­கான கடும் போட்டி முன்னாள் சம்­பியன் றினோன் கழ­கத்­துக்கும் நடப்பு சம்­பியன் கலம்போ எவ்.சி.க்கும் இடையில் நில­வு­கின்­றது.

சம்­பியன் பட்­டத்­திற்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி தேவைப்­படும். றினோன் கழகம் இன்று பிற்­பகல் நடை­பெ­ற­வுள்ள தீர்­மா­ன­மிக்க போட்­டியில் விமா­னப்­படைக் கழ­கத்தை எதிர்த்­தா­ட­வுள்­ளது.

களனி மைதா­னத்தில் நடை­பெறும் இப் போட்­டியில் றினோன் கழகம் வெற்­றி­பெற்றால் இவ் வருடம் டயலொக் சம்­பியன்ஸ் லீக் சம்­பியன் பட்­டத்தை தன­தாக்­கிக்­கொள்ளும்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எம்.சி.எம். ரிப்­னாஸின் தலை­மை­யி­லான றினோன் கழகம் மாத்­தி­ரமே இவ் வருடப் போட்­டி­களில் தோல்வி அடை­யாத அணி­யாகத் திகழ்­கின்­றது. எனவே, இன்­றைய போட்­டி­யிலும் றினோன் கழ­கத்­துக்கு சாத­க­மான முடிவு கிடைக்கும் என நம்­பப்­ப­டு­கின்­றது. 

இவ் வருடம் விமா­னப்­படைக் கழகம் மாறு­பா­டான பெறு­பெ­று­களை சந்­தித்­து­வந்­துள்­ளதால் இன்­றைய போட்­டியில் றினோன் கழ­கத்­துக்கு பாரிய சவா­லாக விளங்கும் என எதிர்­பார்க்­க­ மு­டி­யாது.

இதே­வேளை,சம்­பியன் பட்­டத்தை அடை­வ­தற்­கான சொற்ப வாய்ப்பைக் கொண்­டுள்ள கலம்போ எவ். சி. இன்­றைய தினம் பெத்­த­கான செயற்கைத் தள மைதா­னத்தில் இரா­ணுவ அணியை சந்­திக்­க­வுள்­ளது.

இப் போட்­டியில் கலம்போ எவ்.சி. தோல்வி அடைந்தால் அல்­லது போட்­டியை வெற்­றி­தோல்­வி­யின்றி முடித்­துக்­கொண்டால் அவ்­வ­ணிக்கு இரண்டாம் இடமே கிடைக்கும். ஒரு­வேளை றினோன் தோல்வி அடைந்து கலம்போ எவ்.சி. வெற்­றி­பெற்றால் இந்த இரண்டு அணி­க­ளுக்கும் இடையில் ஜன­வரி மாதம் நடை­பெ­ற­வுள்ள போட்­டியே சம்பியனைத் தீர்மானிக்கும் போட்டியாக அமையும். 

கலம்போ எவ்.சி. அணிக்கு இலங்­கையின் முன்னாள் வீரர் ரௌமி மொஹைதீன் தலை­வ­ராக விளை­யா­டு­கின்றார்.