ரஷ்­ய ஜனா­தி­பதித் தேர்தல் 2018 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி நடை­பெறும் என பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் வாலெண்­டினா மேட்­வெய்ன்கோ அறி­வித்­துள்ளார். ரஷ்ய நாட்டின் ஜனா­தி­பதித் தேர்தல் கடந்த 2012 ஆம் ஆண்டு நடை­பெற்­றது. 

இத்­தேர்­தலில் விளா­டிமிர் புட்டின் வெற்றி பெற்றார். அவ­ரது பத­விக்­காலம் அடுத்த ஆண்டு நிறை­வ­டை­கி­றது.

இதை­ய­டுத்து அடுத்த ஜனா­தி­ப­தியைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான தேர்தல் அடுத்­தாண்டு மார்ச் மாதம் நடை­பெறும் எனக் கூறப்­பட்­டி­ருந்­தது. 

இத்­தேர்­தலில் தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் விளா­டிமிர் புட்டின் மீண்டும் சுயேச்­சை­யாக போட்­டி­யி­டு­வ­தாக அறி­வித்தார்.

இந்­நி­லையில் வரு­கிற 2018 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி ரஷ்ய ஜனா­தி­பதித்  தேர்­தலை நடத்த பாரா­ளு­மன்ற மேல்­ச­பையில் நேற்று முன்­தினம்  வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. இதற்கு செனட் சபை உறுப்­பி­னர்கள் ஒரு­ம­ன­தாக ஆத­ரவு தெரி­வித்து வாக்­க­ளித்­தனர். 

இதை­ய­டுத்து ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை ரஷ்ய பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் வாலெண்­டினா மேட்­வெய்ன்கோ அறி­வித்­துள் ளார்.