இங்­கி­லாந்தில் 4 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண் அறுவை சிகிச்சை மூலம் அழ­கான குழந்­தை­யொன்றை பெற்­றெ­டுத்­துள்ளார். 

இங்­கி­லாந்­தி­லுள்ள பியோனிஸ் நகரை சேர்ந்த கச்சி சுல்­லிவான் பெண்­ணாக பிறந்து வளர்ந்­தவள். ஒரு ஆணுடன் இவ­ருக்கு திரு­மணம் நடந்­தது. அவர்­க­ளுக்கு ஒரு குழந்­தையும் பிறந்­தது.

அதன் பின்னர் 4 ஆண்­டு­க­ளுக்கு பிறகு இவர் ஹோர்மோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இதை­ய­டுத்து, ஸ்டீவென் என்­ப­வரை திரு­மணம் செய்து கொண்டார். அவ­ருடன் வாழ்ந்த அவர் கடந்த  பெப்­ர­வரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

அவ­ருக்கு சமீ­பத்தில் குழந்தை பிறந்­தது. பிர­சவ வலி ஏற்­பட்­ட­வுடன் அவரை வைத்­தி­ய­சா­லையில் சேர்த்­தனர். அங்கு அவ­ருக்கு சுகப்­பி­ர­சவம் ஆக­வில்லை. எனவே, ஒரு வாரம் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அழ­கான குழந்­தையைப் பெற்­றெ­டுத்தார்.

அதன்­மூலம் பெண்­ணா­கவும், ஆணா­கவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் என்ற பெரு­மையை பெற்றார். இவர் வர்த்தகவியல் பட்டம் படித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.