சீனாவின் ஹூனான் மாகா­ணத்தைச் சேர்ந்த உணவு நிறு­வனம் நூடில்ஸ் தயா­ரிப்­பதில் புதிய சாதனை படைத்­துள்­ளனர். அந்­நி­று­வ­னத்தைச் சேர்ந்த சமையல் நிபு­ணர்கள் உலகின் மிக நீள­மான நூடில்ஸை கைகளால் தயா­ரித்து கின்னஸ் சாதனை படைத்­துள்­ளனர்.

அதன் மொத்த நீளம் 10,100 அடி­யாகும். 66 கிலோ எடை­யுள்ள இந்த நூடில்ஸ் தயா­ரிக்க, 40 கிலோ ரொட்டி மா, 26 லீட்டர் தண்ணீர் மற்றும் 0.6 கிலோ உப்பு போன்­றவை சேர்க்­கப்­பட்­டன. போட்­டியில் பங்­கேற்ற ஒருவர், அதனை

நன்­றாக பிசைந்து கெட்­டி­யான மாவாக்­கினார். பின்னர் மூன்று பேர் இணைந்து மாவை சிறிய நூடில்ஸ் அள­விற்கு உருட்டி பாத்­தி­ரத்தில் போட்­டனர். 

இதனை சமையல் நிபு­ணர்கள் 17 மணி நேரத்தில் செய்து முடித்­தனர். நூடில்ஸை உருட்டும் போதே கின்னஸ் அதி­கா­ரிகள் அதன் அளவை குறித்து வைத்­துக்­கொண்­டனர். இது முழு­வதும் கையால் செய்­யப்­பட்ட நூடில்ஸ் ஆகும்.

பின்னர் பூண்டு, முட்டை மற்றும் தக்­காளி சோஸ் ஊற்றி சமைக்­கப்­பட்டு 400 ஊழி­யர்கள் மற்றும் அவர்கள் குடும்­பத்­தி­ன­ருக்கு பரி­மா­றப்­பட்­டது.

நூடில்ஸ் சீன பாரம்­ப­ரிய உண­வாகும். நீள­மான நூடில்ஸை நீண்ட வாழ்­நாளின் சின்­ன­மாக சீனர்கள் கரு­து­கின்­றனர். இந்த முயற்சி அனை­வரும் நல­மாக பல்­லாண்டு வாழ்­வ­தற்­காக எடுக்­கப்­பட்­டது என உணவு நிறு­வ­னத்தின் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

இதற்கு முன் ஜப்­பானில் ஆயி­ரத்து எண்­ணூறு அடி நீளத்தில் செய்­யப்­பட்ட நூடில்ஸின் அளவை முறியடித்து, சீனா கின்னஸ் சாதனை படைத்ததாக கின்னஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.