அணு ஆயுதம், ஏவு­கணைத் திட்­டங்­களை தொட­ரு­வதால் வட­கொ­ரி­யா­வுக்கு அழுத்தம் தரு­கிற வகையில், ஜப் பான் நேற்று முன்­தினம்  புதிய பொரு­ளா­தாரத் தடை­களை அறி­வித்­துள்­ளது. 

உலக நாடு­களின் கடும் எதிர்ப்­புக்கு மத்­தி­யிலும், ஐ.நா. பாது­காப்பு கவுன்சில் தீர்­மா­னங்­க­ளுக்கு இடை­யிலும் வட­கொ­ரியா தொடர்ந்து அணு­குண்டு, ஏவு­கணைத் திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கி­றது.

இதற்­காக வட­கொ­ரியா மீது ஐ.நா. பாது­காப்பு கவுன்­சிலும், அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­களும் தொடர்ந்து பொரு­ளா­தாரத் தடை­களை விதித்து வரு­கின்­றன.

ஆனாலும், வட­கொ­ரியா தனது அணு ஆயுத, ஏவு­கணை திட்­டங்­களில் உறு­தி­யாக இருப்­பதால் அந்த நாட்­டுக்கு எதி­ராக சர்­வ­தேச நிர்ப்­பந்­தங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இந்த நிலையில், வட­கொ­ரி­யா­வுக்கு மேலும் அழுத்தம் தரு­கிற வகையில், ஜப்பான் நேற்று புதிய பொரு­ளா­தார தடை­களை அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பான அறி­விப்பை ஜப்­பா­னிய அரசின் தலை­மைச்­செ­ய­லாளர் யோஷி­ஹிடே சுகா வெளி­யிட்டார். இது குறித்து அவர் கருத்துத் தெரி­விக்­கையில் , “ செப்­டெம்பர் மாதம் வட­கொ­ரி­யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு­கணை ஜப்பான் மீது பாய்ந்­துள்ள நிலையில், இது­வரை இல்­லாத அள­வுக்கு அந்த நாட்டின் அச்­சு­றுத்­த­லுக்­கா­ளாகி  இருக்­கிறோம். எனவே, வட­கொ­ரி­யா­வுக்கு மென்­மேலும் அழுத்தம் தரு­கிற வகையில் புதிய பொரு­ளா­தார தடைகள் விதிக்­கப்­ப­டு­கின்­றன” என்று குறிப்­பிட்டார்.

இதன்­படி வட­கொ­ரி­யாவின் 19 நிறு­வ­னங்கள் மற்றும் தனி­ந­பர்­களின் சொத்­துக்கள் முடக்­கப்­ப­டு­கின்­றன. வங்கிகள், நிலக்கரி மற்றும் தாது வர்த்தகர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டவை ஜப்பானின் தடையினால் பாதிப்புக்குள்ளாகும்.