இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண் ஒருவர்  அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பியோனிஸ் நகரை சேர்ந்த பெண் கச்சி சுல்லிவான். இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய கச்சி சுல்லிவான், ஸ்டீபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கச்சி சுல்லிவான் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்து  ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தார். 

 இதன்மூலம் பெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை கச்சி சுல்லிவான் பெற்றுள்ளார்.