பொலன்னறுவைச் சிறைச்சாலையில் போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் இன்று காலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதியதலாவ மாவித்தாவெல பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாக கொண்ட 15 வயதுடைய  ரணவக்க ஆரச்சிலாகே மலித் ரணவன என்ற சிறுவனே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சிறுவனின் தற்கொலை சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.