பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி, அமெரிக்க தொலைக்காட்சி நடிகை  மெகன் மார்க்லேயை அடுத்த வருடம் மே மாதம் 19ஆம் திகதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சார்லஸ் - டயானா தம்பதியின் இளைய மகன் 33 வயதான இளவரசர் ஹாரிக்கும் அமெரிக்க 'டிவி' நடிகை 36 வயதான மெகன் மார்க்லேக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு உள்ளது.

இவர்களின் திருமண திகதி வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் 2018ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி  கென்சிங்டன் அரண்மணையில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.