இந்­திய அணிக்­கெ­தி­ராக நடை­பெ­ற­வுள்ள மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொட­ருக்­கான இலங்கை அணி  நேற்று மாலை அறி­விக்­கப்­பட்­டது. இரு­ப­துக்கு 20 அணிக்கும் திஸர பெரே­ராவே தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

திஸர தலை­மையில் அறி­விக்­கப்­பட்­டுள்ள இலங்கை அணியில் உபுல் தரங்க, அஞ்­சலோ மெத்­தியூஸ், குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குண­தி­லக, நிரோஷன் திக்­வெல்ல, அசேல குண­ரத்ன, சதீர சம­ர­விக்­கி­ரம, தசுன் சானக, சது­ரங்க டி சில்வா, சசித் பத்­தி­ரன, அகில தனஞ்­சய, துஷ்­மந்த சமீர, நுவன் பிரதீப், விஷ்வ பெர்­ணான்டோ ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.

அதே­வேளை ஒருநாள் தொட­ருக்­கான அணியில் இடம்­பெ­றா­ம­லி­ருந்த லசித் மலிங்க இந்தத் இரு­ப­துக்கு 20 தொட­ருக்கு இணைத்துக் கொள்­ளப்­ப­டுவார் என்று எதிர்­பார்த்­தி­ருந்த நிலையில் அவர் இந்தத் தொடரிலும் கழற்றிவிடப்பட்டுள்ளார். 

அதேவேளை இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­வரும் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடை­பெ­ற­வுள்­ளது.

இந்தப் போட்­டியில் வெற்­றி­ பெறும் அணி எதுவோ அந்த அணியே இந்தத் தொடரை வெல்லும் என்­பதால் நாளைய போட்­டியில் பர­ப­ரப்­புக்கு பஞ்­ச­மி­ருக்­காது.

இந்­தி­யா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யா­டி­வரும் இலங்கை அணி மூன்று போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளைாயாடி வருகின்றது. இந்தத் தொடரில் இரு அணி­களின் தலை­மையும் மாற்­றப்­பட்­டன.

இலங்கை அணியின் தலை­வ­ராக இருந்த உபுல் தரங்­கவை நீக்­கி­விட்டு அந்தப் பொறுப்பை திஸ­ர­ பெ­ரே­ரா­விடம் ஒப்­ப­டைத்­தது இலங்கைக் கிரிக்கெட்.

அதேபோல் மறு­மு­னையில் இந்­திய அணித் தலைவர் விராட் கோஹ்­லிக்கு ஓய்­வ­ளிக்­கப்­பட்டு இந்திய அணியின் தலைமைப் பொறுப்பு ரோஹித் ஷர்­மா­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இந்தத் தொடர் இவ்­விரு அணித் தலை­வர்­க­ளுக்கும் முதல் தொடர் என்­பதால் பர­ப­ரப்பு தொற்­றிக்­கொண்­டது.

திஸர பெரேரா தலை­மை­யி­லான இலங்கை அணி இந்­திய மண்ணில் சாதிக்கும் என்று எதிர்­பார்த்­த­தைப்­போ­லவே முதல் போட்­டியில் இந்­திய அணி படு­தோல்­வியை சந்­தித்­தது.

27 ஓட்­டங்­க­ளுக்கு 7 விக்­கெட்­டுக்­களை இழந்­தது. ஆனால் டோனி கள­மி­றங்கி இந்­திய அணிக்கு சற்று கௌர­வ­மான ஓட்ட எண்­ணிக்­கையைப் பெற்­றுக்­கொ­டுத்தார். ஆனால் இரண்­டா­வது போட்டி அப்­ப­டியே தலை­கீ­ழாக மாறிப்­போ­னது.

முதல் போட்­டியில் அடைந்த தோல்­விக்கு பதி­லடி கொடுத்­தது இந்­தியா. ரோஹித் ஷர்மா களத்தில் தாண்­ட­வ­மாடி இரட்டைச் சதம் விளாச இந்­தியா 392 ஓட்­டங்­களைக் குவித்­தது. இந்த இலக்கை விரட்­டிய இலங்கை அணி தோல்­வியைத் தழு­வி­யது.

மூன்று போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணி­களும் தலா ஒவ்­வொரு போட்­டி­யில் வெற்­றி­பெற்­றுள்­ளதால், மூன்­றாவது போட்டி இரு அணி­க­ளுக்கும் முக்­கி­ய­மான போட்­டி­யாக அமைந்­துள்­ளது. இதில் வெற்­றி­பெறும் அணி தொடரை வெல்லும் என்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கடும் பின்­ன­டைவை சந்­தித்­து­வந்த இலங்கை அணிக்கு இந்­தி­யா­வுக்கு எதி­ரான முதல் போட்­டியில் அடைந்த வெற்றி புதிய நம்­பிக்­கையை கொடுத்­துள்­ளது. 

அந்த உத்வேகத்தில் நாளைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.