வட கொரி­யா­வின் இரண்­டா­வது  அதி சக்தி வாய்ந்த மனிதர் என ஒரு­ச­ம­யத்தில் விப­ரிக்­கப்­பட்ட  உயர்­மட்ட அதி­கா­ரி­யொ­ருவர்  பொது வாழ்­வி­லி­ருந்து காணா­மல்­போயுள்­ள­தாகவும்  அவ­ருக்கு மர­ண­தண்­டனை  நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கலாம்  என நம்­பப்­ப­டு­வதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அந்­நாட்டின் தலைவர் கிம் யொங் –உன் அண்­மையில் மலைப் பிராந்­தி­ய­மொன்­றுக்கு  விஜயம் செய்­த­தை­ய­டுத்து அவர்  தனது ஆட்சித் துறை­யி­லி­ருந்து ஆட்­களைக் களையும் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கலாம் என்ற அச்சம்  தோற்­ற­மெ­டுத்த நிலை­யி­லேயே  அந்த உயர்­மட்ட இரா­ணுவ அதி­கா­ரி­யான ஜெனரல் ஹவாங் பையொங் ஸோ காணாமல் போயுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.   

அவர்  ஒரு சம­யத்தில் உச்ச நிலைத் தலை­வ­ரான கிம் யொங் –உன்­னிற்கு அடுத்த அதி­கா­ரத்­துவம் பொருந்­திய  இரா­ணுவ உப கட்­டளைத் தள­பதி பத­வியை வகித்­திருந்தார். கிம் யொங் –உன் கடந்த வாரம் பீக்து மலைப் பிராந்­தி­யத்­துக்கு விஜயம் செய்­த­தை­ய­டுத்து அவர் உயர்­மட்ட அதி­கா­ரி­யொ­ரு­வ­ருக்கு மர­ண­தண்­டனை  நிறை­வேற்றத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக  அஞ்­சப்­பட்­டது. ஏனெனில்  கடந்த காலங்­களில் வட கொரிய தலை­வர்கள் அந்த மலைப் பிராந்­தி­யத்­துக்கு விஜயம் செய்யும் ஒவ்­வொரு தட­வையும் அந்­நாட்டைச் சேர்ந்த உயர்­மட்ட அதி­கா­ரி­யொ­ரு­வ­ருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வது வழ­மை­யாக  இடம்­பெற்று வந்­தது.   

இலஞ்சம் வாங்­கிய குற்­றச்­சாட்டில்  பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்த ஹவாங் பையொங் ஸோ கடந்த ஒக்­டோபர் மாதம் முதற்­கொண்டு பொது இடத்தில் தோன்­றா­துள்ளார்.  

 2013  ஆம் ஆண்டு கிம் யொங் –உன் மேற்­படி மலைப் பிராந்­தி­யத்­துக்கு விஜயம் செய்­த­தை­ய­டுத்து அவ­ரது மாம­னாரும் பாது­கா­வ­ல­ரு­மான ஜாங் ஸோங் தேக்­கிற்கு மர­ண­தண்­டனை  நிறை­வேற்­றப்­பட்­டது. தொடர்ந்து  2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் அந்த மலைப் பிராந்­தி­யத்­துக்கு விஜயம் செய்­த­தை­ய­டுத்து  முன்னாள் பாது­காப்பு தலை­வர்­களில் ஒரு­வ­ரான ஹையொன் சோங் தேக்­கிற்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

அத்­துடன் 2016 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம்  நடத்­தப்­பட்ட அந்­நாட்டின் ஐந்­தா­வது அணு­சக்திப் பரி­சோ­த­னையின்  பின்­னரும் அவர் அந்த மலைப் பிராந்­தி­யத்­துக்கு யாத்­திரை சென்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 அதே­ச­மயம்  கிம் யொங் – உன்னின் தந்­தையும்  வட கொரி­யாவின் மறைந்த முன்னாள் தலை­வ­ரு­மான கிம் யொங் இல்லும்  1974 ஆம் ஆண்டில் 10 சமூக நல்­லொ­ழுக்க விதிகள் தொடர்பில் அறி­விப்­ப­தற்கு முன்­னரும்  1977 ஆம் ஆண்டில் முன்னாள் சிரேஷ்ட சர்­வ­தேச விவ­கா­ரத்­துக்­கான  அதி­கா­ரி­யான கிம் தோங் கயு­விற்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­று­வ­தற்கு முன்னரும் மேற்படி மலைப்பிராந்தியத்துக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

கிம் யொங் உன்னின் தாத்தாவான  அந்நாட்டின் முதலாவது சர்வாதிகாரியின் பிறப்பிடமாக  விளங்கும் பீக்து மலைப் பிராந்தியம் ஒரு புனித இடமாக வட கொரிய ஆட்சியாளர்களால் கருதப்பட்டு வருகிறது.