புலி­க­ளுக்கு முன்­னு­ரிமை இரா­ணு­வத்­துக்கு இல்லை ; கப்டன் தச­நா­யக்­கவின் மகள் மஞ்­சரி விசனம்

Published By: Priyatharshan

16 Dec, 2017 | 09:39 AM
image

எனது தந்­தை­யான கப்டன் கே.பி. தச­நா­யக்­கவை   அநீ­தி­யான முறையில் கைது­செய்து தடுத்­து­வைத்­துள்­ளனர். அவர் தொடர்­பாக இலங்கை வந்த ஐ.நா. செயற்­கு­ழு­விடம் நான் முறைப்­பாடு செய்ய வந்­த­போதும் எனது முறைப்­பாட்­டை அவர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. புலி தரப்­பாக இருந்தால் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும், இரா­ணுவ தரப்­பாக இருந்தால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும்  என்­னிடம் தெரி­வித்­து­விட்­டனர் என்று விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள கடற்­படை அதி­காரி கப்டன் கே.பி.தச­நா­யக்­கவின் மகள் மஞ்­சரி தச­நா­யக்க தெரி­வித்தார்.

இலங்கை வந்த தன்­னிச்­சை­யாக தடுத்­வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐ.நா. செயற்­குழு பிர­தி­நி­திகள் நேற்று கொழும்பு பண்­டா­ர­நா­யக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்­டப குழு அறையில் இலங்கை

விஜயம் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்கும்   செய்­தி­யாளர் சந்­திப்பை நடத்­தினர். செய்­தி­யாளர் சந்­திப்பு முடி­வ­டைந்­ததும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் குழு அறை­யி­லி­ருந்து வெளியே வந்­த­போது கடற்­படை அதி­கா­ரியின் மகள் மஞ்­சரி தச­நா­யக்க அங்கே நின்­று­கொண்­டி­ருந்தார்.

இதன்­போது அவர் மேலும் ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யி­டு­கையில், 

ஒவ்­வொரு முறையும் ஐ.நா. பிர­தி­நி­திகள் வரும்­போது நான் எனது தந்­தைக்கு இழைக்­கப்­பட்­டுள்ள அநீதி தொடர்பில் முறை­யி­டு­வ­தற்கு வருவேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். இதற்கு முன்னர் இலங்கை வந்த ஐ.நா. அதி­காரி பென் எமர்சன் எனது தந்­தையின் கைது தொடர்பில் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக கூறி­யி­ருந்தார். என்­னு­டைய தந்தை குற்­றச்­சாட்­டுக்கள் இன்றி சிறையில் வைக்­கப்­பட்­டுள்ளார். தற்­போது 5 மாதங்­க­ளாக அவர் சிறையில் இருக்­கிறார். இந்­நி­லையில் இலங்கை வந்த ஐ.நா. குழு­வினர் புலிகள் இருந்த சிறைக்­கூ­டங்­களை சென்று பார்த்­தனர். ஆனால் எனது தந்தை தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு செல்­ல­வில்லை. 

இரா­ணுவ வீரர்­களை இவர்கள் சென்று பார்க்­க­வில்லை. அது­மட்­டு­மன்றி நான் இவர்­க­ளிடம் எனது முறைப்­பாட்டை தெரி­விக்­க­வந்தேன். 

ஆனால் அத­னையும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இலங்கை அதி­காரி ஒரு­வரை அனுப்பி எனது முறைப்­பாட்டை பெற்­றுக்­கொண்­டனர். ஆனால் அது உரிய இடத்திற்கு போகுமா என்று தெரியவில்லை. என்னிடம் முதலில் வந்து புலி தரப்பா?   என்று கேட்டனர். நான் இல்லை இராணுவ தரப்பு என்றேன். உடனே எனது முறைப்பாட்டை ஏற்காமல் சென்றுவிட்டனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27