கொஹு­வல, கட­வத்தை வீதி, களு­போ­வில பிர­தே­சத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு ஏற்­பட்ட தீப்­ப­ரவல் கார­ண­மாக பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்­துள்ளார். 

குறித்த வீட்டின் மேல் மாடியில் உள்ள அறை ஒன்றில் தீ ஏற்­பட்­டுள்­ள­துடன், இதன்­போது அந்த அறையில் இருந்த பெண் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.  57 வய­து­டைய மன­நோ­யினால் பாதிக்­கப்­பட்ட பெண் ஒரு­வரே உயி­ரி­ழந்­தி­ருப்­ப­தாக தெரிய வந்­துள்­ளது. 

பிர­தே­ச­வா­சிகள் மற்றும் தீய­ணைப்பு படையினரின் உத­வி­யுடன் தீயை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­த­தாக பொலி ஸார் தெரி­வித்­தனர். 

தீப்­ப­ர­வ­லுக்­கான காரணம் இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட் டுள்ளனர்.