இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களுள் ஒருவரான அஜிங்க்யா ரஹானேயின் தந்தை மதுகர் ரஹானே கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மதுகர், அவரது மனைவி மற்றும் மகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை வார விடுமுறையைக் கழிப்பதற்காக காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, புனே-பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பெண் ஒருவர் மீது மோதியது.

கடும் காயமுற்ற அந்தப் பெண் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து மதுகர் கைது செய்யப்பட்டார். எவ்வாறெனினும் சில மணிநேரங்களில் பிணையில் அவர் விடுதலையானார்.