இந்தியாவுக்கு எதிரான சர்வதேச இ20 போட்டித் தொடரில், நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க விலக்கப்பட்டுள்ளார்.

மூன்று போட்டிகள் அடங்கிய இந்தத் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது.

இந்நிலையில், லசித் மாலிங்கவுக்குப் பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் ஜீவன் மெண்டிஸ் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 68 இ20 போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மாலிங்க, மொத்தமாக 90 விக்கட்களை வீழ்த்தியிருந்தார். கடைசியாக நடைபெற்ற பத்து இ20 போட்டிகளில் 21 விக்கட்களை அவர் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.