இளவரசர் ஹெரி - மேகன் மார்க்கல் திருமணம் எதிர்வரும் மே மாதம் பத்தொன்பதாம் திகதி வின்சர் கோட்டையில் நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான மேகன் மார்க்கலை இளவரசர் ஹெரி திருமணம் செய்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதானது, இங்கிலாந்து அரச குடும்பம் ஏற்றுக்கொண்டு வரும் மாற்றங்களில் முக்கியமானது எனக் கருதப்படுகிறது.

திருமணத்துக்கு முன் மேகன் மார்க்கலுக்கு ஞானஸ்நானம் பண்ணவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருமணத்தில், ஹெரியின் மாப்பிள்ளைத் தோழனாக அவரது சகோதரர் இளவரசர் வில்லியம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எஃப்ஏ கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் அதே தினத்தில் இந்தத் திருமணம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.