வேட்பு மனு தாக்கல் செய்ய நல்ல நேரம் பார்த்த அரசியல்வாதியொருவர், விடிய விடிய வீட்டுத் தோட்டத்தில் கண் விழித்திருக்க நேர்ந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

குறித்த வேட்பாளர் சோதிடத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர். வெற்றி வாய்ப்பைத் தரும் நேரம் ஒன்றை வேட்பு மனு தாக்கல் செய்வதற்குக் குறித்துத் தருமாறு சோதிடர் ஒருவரை வேட்பாளர் அணுகினார்.

எல்லா அரசியல்வாதிகளும் சோதிடத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர்களே என்று கூறிய சோதிடர், அதிகாலை 1.37க்கு வீட்டை விட்டு வெளியேறினால் நல்லது என்று நேரம் குறித்துக் கொடுத்தார்.

அதன்படி, குறித்த அதிகாலை நேரம் வீட்டை விட்டு வெளியேறிய வேட்பாளர், தேர்தல் அதிகாரிகள் அலுவலகம் வரும் வரை வீட்டுத் தோட்டத்தில் கண்விழித்து நிற்கவேண்டியதாயிற்று.

அவர் கண்விழித்திருக்கும்போது வீட்டாருக்கு எப்படித் தூக்கம் வரும்? அவர்களுக்கும் அன்று சிவராத்திரிதானாம்!