இலங்கையில், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வைத்தியர்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கிவருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரின் உதவியைத் நாடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் சுமார் பதினைந்தாயிரம் வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளிலும் சொந்த வைத்தியசாலைகளிலும் பணியாற்றுகிறார்கள். எனினும் இவர்களில் எவரேனும் முறையான அனுமதியைப் பெறாமல் இருந்தால் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.